ஜெனீவாவில் மீண்டும் ஒரு கோவிட் காலகட்டம்? அதிகாரிகள் விமர்சனம்
பிரான்சில் நடைபெற இருக்கும் மாநாடு ஒன்று, அருகிலுள்ள ஜெனீவாவுக்கு பல இடையூறுகளை உருவாக்கியுள்ளது.
ஜெனீவாவுக்கு பல இடையூறுகள்
இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை பிரான்சிலுள்ள Évian என்னுமிடத்தில் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
விடயம் என்னவென்றால், 2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évianஇல் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
அப்போது நிகழ்ந்த வன்முறை, சூறையாடலால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றின் காயம் ஜெனீவாவில் வாழும் பலருக்கும் மனதளவில் இன்னமும் ஆறவில்லை.
இந்நிலையில், இம்முறை நடைபெறும் G7 உச்சி மாநாட்டால் மீண்டும் ஜெனீவாவில் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், ஜெனீவா அதிகாரிகள் அதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார்கள்.
அவ்வகையில், லோசான் நகரிலிருந்து புறப்படும் படகுப்போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாநாடு முடியும் வரை, படகுகளில் பாதுகாப்பு ஏஜண்டுகள் பயணிக்க இருக்கிறார்கள்.
ஜெனீவாவின் பல எல்லைகள் முழுமையாக மூடப்பட உள்ளன. வீடுகளிலிருந்து வேலை செய்ய மக்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை பிரான்சில் G7 மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 11 முதலே ஜெனீவாவில் பல கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஆக, G7 மாநாடு காரணமாக அறிமுகம் செய்யப்பட்டுவரும் கட்டுபாடுகளால் ஜெனீவா மாகாண மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதால், அதை ஒரு குறுகிய கோவிட் காலகட்டத்துடன் ஒப்பிட்டுள்ளார்கள் ஜெனீவா அதிகாரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |