கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் கின்னஸ் உலக சாதனை
கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து சாதனை
59 வயதான முன்னாள் விண்வெளி பொறியாளர் ருடிகர் கோச்(Rüdiger Koch) என்ற ஜேர்மன் நாட்டவர் கடலுக்கடியில் 120 நாட்கள் தொடர்ந்து வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
பனாமா கடற்கரையை ஒட்டியுள்ள 30 சதுர மீட்டர் அளவுள்ள ஒரு கட்டமைப்பிற்குள் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோச் திறமையாக இந்த கட்டமைப்பை வசதியான மற்றும் செயல்பாட்டுடன் கூடிய வாழ்க்கை இடமாக மாற்றியுள்ளார்.
படுக்கை, கழிவறை, தொலைக்காட்சி, இணைய இணைப்புடன் கூடிய கணினி மற்றும் உடற்பயிற்சி சைக்கிள் உள்ளிட்ட வசதிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
சூரிய ஒளி மின் கலன்கள் மற்றும் மாற்று மின்சார ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு, நீண்ட கால நீருக்கடியில் தங்கியிருக்கும் அவருக்கு தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்க வசதிகள் அதில் செய்யப்பட்டு இருந்துள்ளது.
முந்தைய சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி(Joseph Dituri), ஃப்ளோரிடா லாகூனில் 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து முந்தைய சாதனையை படைத்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |