கோவில் நிகழ்ச்சியில் ஆடைகளை அவிழ்த்து நின்ற ஜேர்மன் பெண்! பாலி அதிகாரிகள் நடவடிக்கை
பாலி தீவில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாணமாக நின்ற ஜேர்மன் பெண் சுற்றுலா பயணி இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஜேர்மானிய பெண் சுற்றுலா பயணி
கோவிலில் புனித நிகழ்ச்சியின்போது ஆடைகளை அவிழ்த்து நின்றதால் கைது செய்யப்பட்ட அப்பெண் மனநல சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்ஜா துஷின்ஸ்கி (Darja Tuschinski) என அறியப்படும் இருபத்தெட்டு வயதான ஜேர்மானிய பெண், பாலி தீவில் விடுமுறையில் இருந்தபோது ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
பாலி தீவில் வாழும் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதற்காக அல்லது தவறான செயல்களில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு பார்வையாளர்கள் நாடு கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறுகின்றார்.
தர்ஜா துஷின்ஸ்கி பாலியில் தங்குவதற்கு பணம் இல்லாததால் மனச்சோர்வடைந்துள்ளதாக பொலிஸிவ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் உலாவும் வீடியோக்கள்
சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு வீடியோக்களில், உபுடில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் நடனக் கலைஞர்களுக்கு அருகில் அவர் நிர்வாணமாக நடந்து செல்வதும், தியானம் செய்வதும் தெரிகிறது. மேலும் அவர் சன்னதியின் உள் சரணாலயத்திற்குள் நுழைய முயன்றதும், பாதுகாப்பு காவலர் அவரை தடுப்பதும் வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் தங்கியிருந்த ரிசார்ட்டின் விருந்தினர் பகுதிகளிலும் நிர்வாணமாக சுற்றித் திரிந்ததாக இந்தோனேசிய காவல்துறை கூறியது. இருப்பினும், அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
TheBaliSun
மேலும், அவர் நிர்வாணமாக ஆடியதை தொடர்ந்து கோயிலை சுத்தப்படுத்த சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜேர்மனிக்குத் திரும்பும் விமானத்தில் ஏற மறுத்ததால், இறுதியில் பங்லி நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Bali- Getty Images