நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம்: பதறவைக்கும் காட்சி
ஜேர்மன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை பதறவைத்துள்ளன.
நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம்
சனிக்கிழமை இரவு, 300 பேரை சுமந்துகொண்டு ஜேர்மனி நோக்கி வந்துகொண்டிருந்த போயிங் ரக விமானம் ஒன்றின் எஞ்சின்களில் ஒன்றில் தீப்பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
A German Condor aircraft flying to Düsseldorf made an emergency landing in southern Italy due to engine failure caused by suspected bird strike.
— FL360aero (@fl360aero) August 17, 2025
The Condor Boeing 757-330 aircraft (D-ABOK) flying from Corfu (CFU) to Dusseldorf (DUS) started spitting flames right after the… pic.twitter.com/k4b0W0myqg
கிரீஸ் நாட்டிலுள்ள Corfu என்னுமிடத்திலிருந்து ஜேர்மனியின் Dusseldorf நோக்கிப் புறப்பட்ட அந்த விமானத்தில், 273 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் இருந்தார்கள்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் எஞ்சின்களில் ஒன்றில் தீப்பிடித்துள்ளது.
மற்றொரு வீடியோவில் அந்த விமானம் பறவைக்கூட்டம் ஒன்றினூடே செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த விமானம் பறவைகள் மீது மோதியதில் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுவதாகவும் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yesterday, Condor flight #DE3665, a Boeing 757-300 (D-ABOK) from Corfu to Düsseldorf, suffered engine surges shortly after takeoff with flames and loud bangs reported from the right engine.
— Turbine Traveller (@Turbinetraveler) August 17, 2025
The crew shut it down, declared an emergency, and safely diverted to Brindisi, Italy,… pic.twitter.com/5spEYF8uKf
எஞ்சின்களில் ஒன்றில் தீப்பிடித்ததும், விமானி அந்த எஞ்சினின் இயக்கத்தை அணைத்துவிட்டு Corfu விமான நிலையத்துக்கே செல்ல திட்டமிட்டதாகவும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு இத்தாலியிலுள்ள Brindisi விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |