ஜேர்மனியின் க்ரூஸ் ஏவுகணைகளை பராமரிக்க ஸ்வீடனுடன் ஒப்பந்தம்
ஜேர்மனியின் க்ரூஸ் ஏவுகணைகளை பராமரிக்க ஸ்வீடனுடன் 159 மில்லயன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் Saab நிறுவனம் 1.7 பில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா ($159 mn) மதிப்புள்ள ஒப்பந்தத்தை ஜேர்மனியாவிலிருந்து பெற்றுள்ளது.
இது Taurus KEPD 350 என்ற (ஜேர்மன்-ஸ்வீடிஷ்) க்ரூஸ் ஏவுகணைகளை 2035 வரை பராமரிக்க மற்றும் முன்னோக்கி மேம்படுத்த செய்யும் பணிகளை உள்ளடக்கியது.
Saab நிறுவனம், Taurus Systems நிறுவனத்திலிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. Taurus Systems என்பது Saab மற்றும் ஜேர்மனியின் MBDA Germany ஆகிய நிறுவனங்களின் கூட்டுச்சேர்பு நிறுவனமாகும்.
க்ரூஸ் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறப்பதால், அவற்றை விமான எதிர்ப்பு ரடார்களால் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். இதனால் இந்த ஏவுகணை ராணுவ துறையில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்த அறிவிப்புக்குப் பின்னர் Saab நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11.3% உயர்ந்துள்ளது. மேலும், ஏறக்குறைய 14% வரை அதிகரித்து, ஸ்டாக்ஹோம் பங்குச்சந்தையில் புதிய உச்சத்தை எட்டியது.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்திய உச்சிமாநாட்டிற்கு பிந்தைய ஐரோப்பிய பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிக்கலாம் என்பதால், மற்ற ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |