வீடுகளின் பால்கனியிலிருந்து மின்சார உற்பத்தி: அசத்தும் ஜேர்மானியர்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்க ஆசைப்படும் மக்கள் முன்பெல்லாம் சவுதி போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்வது வழக்கமாக இருந்தது.
பிறகு மக்கள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் பக்கம் திரும்பத் துவங்கினார்கள்.
தற்போது, பல மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டவர்களுக்கு கெடுபிடிகளை அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பார்வை ஜேர்மனி பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு ஜேர்மனி தகுதியுடையது என்றே கூறலாம்.
வீடுகளின் பால்கனியிலிருந்து மின்சார உற்பத்தி
சில நாடுகளில் ஊதிய உயர்வு போன்ற விடயங்களுக்காக, மக்கள் சாலையில் இறங்கிப் போராடவேண்டியுள்ளது.

ஆனால், ஜேர்மனி ஆண்டுதோறும் தானாகவே குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துகிறது.
பல நாடுகள் வெளிநாட்டவர்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, ஜேர்மனியோ எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என தகுதியுடையோரை அழைக்கிறது.
அதேபோல, மக்கள் தங்கள் வசதிகளை அதிகரித்துக்கொள்ளவும் அரசு அனுமதிக்கிறது.
அவ்வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவி, தங்களுக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வதற்கும் ஆதரவு தருகிறது ஜேர்மனி.
ஆம், மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்வது ஜேர்மனியில் பிரபலமாகிவருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளார்கள்.
சிலர் சோலார் பேனலுடன் பேட்டரிகளையும் இணைத்து, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வதற்காக மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறார்கள்.
சோலார் பேனல்கள் விலையும் கணிசமாக குறைந்துவருகிறது. சிறிய பேனல்கள், 200 யூரோக்களுக்கும், மின்சாரத்தை சேமிக்கும் வசதிகொண்ட பெரிய பேனல்கள் 1,000 யூரோக்களுக்கும் கிடைக்கின்றன.
சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான செலவு, மின்கட்டணத்தை ஒப்பிடும்போது பாதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |