உக்ரைனை கைவிட்ட எலோன் மஸ்க்... பிரான்ஸ் நிறுவனத்துடன் ஆதரவாக களமிறங்கிய ஜேர்மனி
எலோன் மஸ்கின் Starlink நிறுவனம் உக்ரைனை கைவிட்ட நிலையில், பிரன்சின் Eutelsat நிறுவனத்துடன் உக்ரைனுக்கு ஆதரவாக ஜேர்மனி களமிறங்கியுள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்தால்
பிரான்சின் Eutelsat நிறுவனம் மூலம் இயக்கப்படும் செயற்கைக்கோள்-இணைய சேவையை உக்ரைன் பயன்படுத்தும் பொருட்டு ஜேர்மனி நிதியுதவி அளித்து வருகிறது.
Eutelsat நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈவா பெர்னெக் தெரிவிக்கையில், தங்கள் நிறுவனம் அதன் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை உக்ரைனுக்கு ஒரு வருடத்திற்கு ஜேர்மன் விநியோகஸ்தர் வழியாக வழங்கி வருகிறது என்றார்.
இது ஜேர்மன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வருகிறது என்றும், ஆனால் செலவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்குத் திரும்பியதிலிருந்து உக்ரைனிடம் மிகவும் விரோதமான போக்கையே கொண்டிருந்தார்.
ரஷ்ய ஆதரவு நிலை
இது ஐரோப்பாவில் ஸ்டார்லிங் சேவையை நம்புவது பற்றிய கவலையைத் தூண்டியது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கும் அதன் இராணுவத்திற்கும் முக்கியமான இணைய சேவையை எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் வழங்கி வந்தது.
ஆனால் மறைமுகமாக ரஷ்ய ஆதரவு நிலையை டொனால்டு ட்ரம்ப் எடுத்ததை அடுத்து, எலோன் மஸ்கும் உக்ரைனுக்கு எதிராக திரும்பினார். தற்போது எலோன் மஸ்க் நிறுவனமான ஸ்டார்லிங்கின் முக்கிய போட்டியாளரான Eutelsat நிறுவனம் உக்ரைனுக்கு அதிவேக இணையை சேவையை வழங்குகிறது.
2022ல் இருந்து உக்ரைனுக்கான இணைய சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 84 மில்லியன் டொலர் கட்டணமாக செலுத்தியதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |