யூதர்களுக்கு அனுமதி இல்லை: ஜேர்மன் ஹோட்டலில் வெடித்த சர்ச்சை: வலுக்கும் கண்டனம்
ஜேர்மனியில் ஹோட்டல் ஒன்றில் யூதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
யூதர்களுக்கு அனுமதி இல்லை
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இஸ்ரேலிய விருந்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய விருந்தினருக்கு ஹோட்டல் நிர்வாகம் அனுப்பிய மறுப்பு செய்தியை தெற்கு ஜேர்மனிக்கான இஸ்ரேலிய தூதர் தல்யா லாடோர் தன்னுடைய X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Sind wir wieder in den 1930er Jahren? Ein Hotel hat einem Israeli folgendes geantwortet: „sorry, there are no Jews allowed in our hotel“.
— Talya Lador (@TalyaLador) June 2, 2026
Ich bin froh darüber, dass @bookingcom dieses Hotel von seiner Homepage verbannt hat. pic.twitter.com/3hiBEK1dse
அதில், ஹோட்டல் சூம் ஹிஷென்(Hotel zum Hirschen) என பெயரிடப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் செய்தியில் யூதர்களுக்கு ஹோட்டலில் அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹோட்டல் நிர்வாகம் விளக்கம்
இந்த விவகாரம் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களை பெற்ற நிலையில், ஹோட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட யூத விருந்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

பாகுபாடு காட்டுவது என்பது தங்களுடைய நோக்கம் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யூத விருந்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வார காலம் வரை ஹோட்டலில் இலவசமாக தங்கி இருக்க அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் ஹோட்டலின் கொள்கை சம்பந்தப்பட்டது இல்லை என்றும், போலியான முன்பதிவுகள் மற்றும் மோசடி மின்னஞ்சல்கள் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் மன உளைச்சலில் இருந்ததாக ஹோட்டலின் இளைய இயக்குநர் ஆண்டரியாஸ் வோக்ல் தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |