புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பில் விவாதிக்க வெளிநாடு செல்லும் ஜேர்மன் அமைச்சர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த உள்துறை அமைச்சர்களும், டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் சந்திக்க இருக்கிறார்கள்.
அந்த சந்திப்பில் ஜேர்மன் உள்துறை அமைச்சரும் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களுடைய விவாதத்தின் முக்கிய பொருளாக புலம்பெயர்தல் அமைய உள்ளது.
27 உள்துறை அமைச்சர்களின் சந்திப்பு
புலம்பெயர்தல் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக, ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த உள்துறை அமைச்சர்களும், டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் சந்திக்க இருக்கிறார்கள்.
விவாதத்தின் முக்கிய கருப்பொருளாக புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை எப்படி நாடுகடத்துவது, சட்டவிரோத புலம்பெயர்தலை எப்படி கட்டுப்படுத்துவது ஆகிய விடயங்கள் இடம்பெற உள்ளன.
மேலும், குழுக்களால் திட்டமிடப்பட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் பேச இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |