ஜேர்மனி எங்களின் உண்மையான நண்பன்: சுற்றுப்பயணத்தில் உணர்ச்சி பொங்கிய ஜெலென்ஸ்கி
ஜேர்மனி உக்ரைனின் உண்மையான நண்பன் என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜேர்மனி சுற்றுப்பயணம்
கடந்த ஆண்டு ரஷ்யாவின் அத்துமீறிய போர் தாக்குதல் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஜேர்மனியின் வால்டர் ஸ்டெய்ன்மியர்(Walter Steinmeier) உடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸை (Chancellor Olaf Scholz) சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Today, Ukrainian President Volodymyr Zelenskyy arrived in Germany
— Euromaidan Press (@EuromaidanPress) May 14, 2023
Photos show his meeting with German President Frank-Walter Steinmeier
?Radio Svoboda pic.twitter.com/SdOrgpye6K
மேலும் ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் போர் தாக்குதலில் உக்ரைனுக்கு உறுதுணையாக நிற்பதற்காக ஜேர்மனிக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையில் ரஷ்யாவின் அத்துமீறிய போர் நடைமுறைகளை தொடர்ந்து எதிர்ப்பதற்கு தேவையான கூடுதல் ஆயுத உதவிகளை பெறுவதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த ஜேர்மன் சுற்றுப்பயணம் அமைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
President #Zelenskyy met with German Chancellor Olaf #Scholz in #Berlin. pic.twitter.com/s63nqiXDMJ
— NEXTA (@nexta_tv) May 14, 2023
உக்ரைனின் உண்மையான நண்பன்
போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ஜேர்மன் வந்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜேர்மனியை உக்ரைனின் “உண்மையான நண்பன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சவாலான நவீன உக்ரைன் வரலாற்றில், சுதந்திரம் மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக போராடும் உக்ரைன் மக்களுடன் பக்கபலமாக நின்று ஜேர்மனி உக்ரைனின் “உண்மையான நண்பன்” மற்றும் “நம்பகமான கூட்டணி” என்று நிரூபித்துள்ளது என ஜேர்மன் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எழுதியுள்ளார்.
AP