அமெரிக்காவில் இது ஏமாற்றம்! கலாச்சார அதிர்ச்சி விடயங்களை பகிர்ந்த ஜேர்மனி இளைஞர்
அமெரிக்காவின் கலாச்சார அதிர்ச்சி விடயங்களை பகிர்ந்த ஜேர்மனி இளைஞர் ஜேர்மனி சுற்றுலாப்பயணி இளைஞர் ஒருவர், அங்கு சந்தித்த ஆச்சரியமூட்டும் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் வருகை
ஜேர்மனியைச் சேர்ந்த ஓலே லெஹ்மான் (Ole Lehmann) என்ற இளைஞர், 6 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு தனது முதல் வருகையின்போது லாஸ் வேகாஸ் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு சென்றார்.
அங்கு அவர் சந்தித்த அனுபவங்கள், கலாச்சார விடயங்கள் குறித்து வியந்து பட்டியலிட்டுள்ளார். லெஹ்மான் அமெரிக்காவின் tipping கலாச்சாரத்தை 'உடைந்த அமைப்பு' என அழைத்தார்.
கார்கள் முதல் குளிர்பானங்கள் வரை அனைத்தும் அதிகரிக்கப்பட்ட விலையில் இருப்பதாக அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆச்சரியப்படுத்திய விடயங்கள்
கடைசியாக அமெரிக்காவில் தான் கண்ட 15 வினோதங்களை பட்டியலிட்ட லெஹ்மான், அங்குள்ளவர்கள் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார்கள் என்பது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.
அவர் அமெரிக்கர்கள் குறித்து கூறுகையில், "எந்தவித எதிர்மறையான அணுகுமுறையும் இல்லாமல் மக்கள் தங்கள் வேலை மற்றும் நிதி வெற்றியைப் பற்றி பேசுவதில் உற்சாகமாக இருப்பதை நான் உணர்ந்தேன். இந்த தலைப்புகளை ரசிக்கும் ஒருவனாக, மற்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் அவற்றைப் பற்றி பேச நான் சுதந்திரமாக உணர்ந்தேன். துரித உணவுகள் ஏமாற்றம் அளித்தது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அமெரிக்க கலாச்சாரம் வணிக ரீதியான வெற்றி மற்றும் அதனுடன் வரும் அனைத்து பொருட்களுக்கும் அதிக மதிப்பை அளிக்கிறது என்பது வெளிப்படையானது. அமெரிக்கர்களின் பேச்சு ஐரோப்பியர்களை விட சத்தமாக உள்ளது, அதாவது 10 மடங்கு அதிகம்" என குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |