ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய சுகாதாரச் சட்டம் நிறைவேற்றம்- மக்கள் எதிர்ப்பு
ஜேர்மனியின் நாடாளுமன்ற கீழ்சபை (Bundestag) சுகாதாரச் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டம் 2027 முதல் அமலுக்கு வரும். புதிய சட்டத்தின் படி, மருந்துகளுக்கான co-payment அதிகரிக்கப்படும். இதுவரை 5 முதல் 10 யூரோவாக இருந்த கட்டணம், இனி 7.50 முதல் 15 யூரோவாக உயர்த்தப்படும்.
மேலும், காப்பீடு பெற்றவர்களின் துணைவர் இனி இலவசமாக காப்பீடு பெற முடியாது, அவர்களும் தனியாக காப்பீடு செய்ய வேண்டும்.
சில சிகிச்சைகள், குறிப்பாக ஹோமியோபதி மற்றும் பல் மாற்று சிகிச்சைகளுக்கான காப்பீடு குறைக்கப்படும். சில அறுவை சிகிச்சைகளுக்கு முன், இரண்டாவது மருத்துவரின் கருத்து பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் மூலம் ஜேர்மன் அரசு 16.3 பில்லியன் யூரோ செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Green Party மற்றும் Left Party உறுப்பினர்கள், இந்தச் சட்டம் மருத்துவமனைகள் மூடப்படுவதற்கும், மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.
இச்சட்டம் தற்போது நாடாளுமன்ற மேலவை (Bundesrat) அனுமதி பெற வேண்டும். அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், mediation committee-க்கு அனுப்பப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |