ஆறு மாத ராணுவ சேவை: திட்டமிடும் ஜேர்மன் அரசு
ஜேர்மனி கட்டாய ராணுவ சேவையை 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஆனால், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகள் அவசியம் என ஜேர்மன் அரசு கருதுகிறது.
ஆறு மாத ராணுவ சேவை
இந்நிலையில், ஆறு மாத ராணுவ சேவை திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.
ஆனால், இந்த திட்டம் கட்டாய ராணுவ சேவை அல்ல. மாறாக, அது விருப்பமுடையோர் ராணுவ சேவையில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கும் ஒரு திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி, விருப்பமுடையவர்கள் ஆறு மாதங்கள் ராணுவ சேவை செய்யலாம். தேவை ஏற்படும் நிலையில், ராணுவ சேவை தொடர்பில் சட்டம் கொண்டுவரப்படலாம்.
இப்படி குறுகிய கால ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதால், நாட்டில் ராணுவ பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாவதுடன், ராணுவ பயிற்சி பெறுவோரில் சிலருக்கு ராணுவத்தில் சேர ஆர்வம் ஏற்படலாம் என்பதாலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |