ஜேர்மனியின் 2021 தேசிய தேர்தல் மீண்டும் நடத்தப்படும்!
ஜேர்மனியின் 2021 தேசிய தேர்தலில் சில குறைபாடுகள் இருந்த காரணத்தினால், பெர்லினில் மீண்டும் தேர்தல் நடத்தபட உள்ளது
பெர்லினில் மீண்டும் தேர்தல்
ஜேர்மனியின் 2021 தேசியத் தேர்தல், தேர்தல் குறைபாடுகள் காரணமாக பெர்லினில் சில பகுதிகளில் மீண்டும் நடத்தப்படும் என்று நாட்டின் கூட்டாட்சி தேர்தல் அதிகாரி ஜார்ஜ் தியேல் கூறினார். இது குறித்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பன்டெஸ்டாக்கின் முடிவை அவர் வரவேற்றார்.
தேர்தல் பிழைகளின் கணிசமான எண்ணிக்கையையும் தீவிரத்தன்மையையும் குறிப்பிட்டு, தேர்தல்களை முறையாக நடத்துவதில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான சரியான முடிவாக இந்த மறு தேர்தல் இருக்கும் என்று தியேல் கூறினார்.
இந்த பிழைகள், நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பன்டேஸ்டாக்கில் இருக்கைகளின் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.
2021 தேசிய தேர்தல் குறைபாடுகள்
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த கூட்டாட்சித் தேர்தலின் போது, பெர்லினில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகள் மற்றும் காத்திருப்பு நேரங்கள், அத்துடன் தவறான அல்லது தவறிய வாக்குச் சீட்டுகள் என பல குறைபாடுகள் இருந்தன. சில வாக்குச்சாவடிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மறுதேர்தலில், தலைநகரில் மொத்தம் உள்ள 431 தொகுதிகளில் குடிமக்கள் மீண்டும் வாக்களிக்க உள்ளனர்.
இரண்டு மாதங்களுக்குள் ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் எந்த புகாரும் தாக்கல் செய்யப்படாவிட்டால், 2023-ன் தொடக்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.
picture alliance/dpa