ஜேர்மனியில் பொது கட்டடங்களை பதுங்கு குழிகளாக, முகாம்களாக மாற்ற திட்டம்
ரஷ்யாவுடன் ஏற்படும் போர் அபாயத்தின் எதிரொலியாக, ஜேர்மனி பொது கட்டடங்களை குண்டு தாக்கத்தை தாங்கும் பதுங்கு குழிகளாக மாற்ற திட்டங்களை வகுக்கிறது.
ஜேர்மனியின் மத்திய குடிமக்கள் பாதுகாப்பு அலுவலகம், மெட்ரோ நிலையங்களை பதுங்கு குழிகளாக பயன்படுத்தவும், பொது கட்டடங்களை அவசர பாதுகாப்பு முகாம்களாக மாற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
84.4 மில்லியன் மக்கள்தொகையுள்ள ஜேர்மனியில், தற்போதைய 579 பொது முகாம்கள் வெறும் 5 லட்சம் மக்களுக்கு மட்டுமே இடம் அளிக்கக்கூடியதாக உள்ளன.
புதிய முகாம்களை அமைப்பதற்கு ஒரு தலைமுறைக்காலம் ஆகும் என மத்திய பாதுகாப்பு அலுவலகம் தலைவர் ரால்ஃப் டைஸ்லர் எச்சரித்துள்ளார்.
அவசர தீர்வாக, மெட்ரோ நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது கட்டடங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், குடிமக்கள் தங்களைப் பாதுகாக்கும் வழிகளை அறியவும், அருகிலுள்ள பதுங்குகுழிகளை கண்டறியவும் ஒரு மொபைல் ஆப்பை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, போலந்து போன்ற நாடுகள் தங்களின் பாதுகாப்பு முகாம்களை விரைவாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டிலிருந்து புதிய கட்டடங்களுக்கு பதுங்குகுழிகள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள், உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany bomb shelters, bunkers, Germany Russia War, World War III, Russia European War, Russia Nato War