உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் மதிப்பிற்கு ராணுவ ஆயுதங்களை வழங்கிய நாடு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஜெர்மன் உக்ரைனுக்கு பாரிய ராணுவ உதவி செய்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஜெர்மன் தற்போது புதிய ராணுவ ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய ராணுவ ஆயுதங்கள்
3 பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கியுள்ளதாக, ஜெர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாரிய ராணுவ உதவி
’ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி கொண்டிருக்கும் தாக்குதலுக்கு முடிவு கட்டப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார். மேலும் அவர் ’அதனால் தான் ஜெர்மன் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்தது’ எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வழங்கிய 3 பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட ராணுவ ஆயுதங்களில் முக்கியமாக 30 லியோபர்ட்-1 ரக பீரங்கிகளும், மார்டர் போர் வாகனங்களும், பாதுகாப்பு கருவிகள் மற்றும் ட்ரோன்களும் அடங்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கப்பட்டத்திலிருந்து, ஜெர்மன் செய்த உதவிகளில் இதுவே பாரிய ராணுவ உதவி என ஜெர்மன் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி கடந்த ஆண்டு பாரிய அளவில் ராணுவ உதவி செய்திருந்தது. அதனை தொடர்ந்து மேலும் புதிதாக லிபோர்ட்-2 பீரங்கிகளும் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.