ஜேர்மனியில் புதிய இராணுவ சேவை திட்டம் - 2027 முதல் கட்டாய மருத்துவ பரிசோதனை
ஜேர்மனியின் கூட்டணி அரசு, நாட்டின் இராணுவத்தை (Bundeswehr) வலுப்படுத்த புதிய இராணுவ சேவை திட்டத்தை அறிவித்துள்ளது.
நீண்டகால விவாதத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த திட்டம், ஐரோப்பாவின் மிக வலுவான பாரம்பரிய இராணுவத்தை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, அனைத்து 18 வயது ஆண்கள் அடுத்த ஆண்டு முதல் தகுதி கேள்வித்தாளை நிரப்ப வேண்டும்.
2027 முதல் கட்டாய மருத்துவ பரிசோதனை நடைமுறைக்கு வரும். அதே வயதுடைய பெண்களுக்கு கேள்வித்தாள் விருப்ப அடிப்படையில் வழங்கப்படும்.

தற்போது, ஜேர்மனியின் இராணுவத்தில் சுமார் 1,82,000 வீரர்கள் உள்ளனர்.
புதிய திட்டத்தின் மூலம், அடுத்த ஆண்டு 20,000 பேரை கூடுதலாக சேர்க்கவும், 2030-களின் நடுப்பகுதிக்குள் 2,60,000 வீரர்கள் மனற்றும் 2,00,000 ரிசர்வ் படையினர் கொண்ட படையை உருவாக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Rheinmetall நிறுவனத்தின் தலைவர் Armin Papperger, "இது 5 ஆண்டுகளில் அடையக்கூடிய இலக்கு என கூறியுள்ளார்.
ஆனால் ஆட்சியாளர்கள், ஆட்சேர்ப்பு குறைவாக இருந்தால் கட்டாய சேவை அமுல்படுத்தப்படலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, ரஷ்யா அடுத்த 4 ஆண்டுகளில் NATO மீது தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கையுடன் தொடர்புடையது. ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவர் ஜெனரல் Carsten Breuer, 2029-க்குள் தயாராக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இளைஞர்களிடையே எதிர்ப்பு அதிகரித்ததுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பில், 18 முதல் 29 வயதினரில் மூன்றில் இரண்டு பங்கு கட்டாய சேவைக்கு எதிராக உள்ளனர். Bundestag முன்பு ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இருப்பினும், சிலர் இதனை தேசிய பாதுகாப்பிற்கான பங்களிப்பு எனக் கருதி ஆதரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany new military service plan 2025, Bundeswehr recruitment targets 2027, Germany compulsory military questionnaire, German army expansion to 260,000 troops, Rheinmetall Armin Papperger statement, NATO Russia threat Germany response, German parliament military service vote, Germany youth opposition conscription, Carsten Breuer NATO warning Russia, Germany reserve forces 200,000 support