பெருந்தொற்றுக்கு நிகரான பாதிப்பு ஏற்படும்: ஈரான் போர் தொடர்பில் ஜேர்மன் அதிபர் எச்சரிக்கை
ஈரான் போரினால் பெருந்தொற்றுக்கு நிகரான பாதிப்பு ஏற்படும் என்று ஜேர்மன் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனி அதிபர் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் பிராந்திய போராக மாறினால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என ஜேர்மன் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த பொருளாதார பாதிப்புகள் ஜேர்மனியையும், ஐரோப்பாவையும் மிக கடுமையாக பாதிக்கும் என்றும் ஜேர்மன் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதாக மெர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை போர் தாக்குதல்கள் எல்லை தாண்டி பரவினால் அது ஐரோப்பிய பிராந்தியத்தின் பொருளாதாரத்திற்கும் பொது பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டினார்.
புதிய தொடர்பு குழு
அதே நேரத்தில் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க புதிய சர்வதேச தொடர்பு குழு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி ஃபிரீட்ரிக் மெர்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த புதிய சர்வதேச தொடர்பு குழு, தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளை சீரமைத்தல், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |