ஜேர்மனியில் வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு வீடு கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள்
ஜேர்மனியில் வெள்ளையர்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை நிலவுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
நிலவும் பாகுபாடு
ஜேர்மனியில், வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு வாடகைக்கு வீடு விடப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவது தொடர்பில், German Center for Integration and Migration Research (DeZIM) என்னும் ஆய்வமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வில், இஸ்லாமியர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வீடு கிடைப்பதில் அதிக பிரச்சினை உள்ளது தெரியவந்துள்ளது.
Jochen Tack/picture alliance
மேலும், வீடு வாடகைக்கு என்னும் விளம்பரத்தைப் பார்த்து விசாரிக்கும்போதே, வாடகைக்கு வீடு தேடுவோரின் பெயர் ஜேர்மானியர் பெயர் போல் இல்லாவிட்டால், அவர்களில் பலர் வீடு பார்க்க அழைக்கப்படுவதே இல்லையாம்.
ஆக, தேடிய நல்ல வீடுகள் கிடைக்காததால், சரியான வசதிகள் இல்லாத, மிகவும் சிறிய வீடுகள், மற்றும் அதிக வாடகை உள்ள வீடுகளில் தங்கும் நிலையும் இந்த வெள்ளையரல்லாத மக்களுக்குக் காணப்படுகிறது என்கிறது அந்த ஆய்வு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |