ஆப்கானிஸ்தானை அடுத்து ஆளப்போகும் தாலிபான் தலைவர் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தாலிபான்கள் தலைவர் முல்லா அப்துல் கானி பரதார் பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா்.
இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தாலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தாலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருநது அவசரமாக வெளியேறி வருகின்றனா். ஜனாதிபதி அஷ்ரப் கானி, ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை அடுத்து தலைமையேற்று யார் வழிநடத்துவார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து தாலிபான்களின் உச்சத்தலைவர் முல்லா அப்துல் கானி பரதார் தான் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லா கடந்த 1968ஆம் ஆண்டு உருஸ்கான் மாகாணத்தில் பிறந்தார். தாலிபான்கள் அமைப்பின் துணை நிறுவனரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.