நிலைமை மிக மோசமடையும் நிலையில்... நாட்டு மக்களிடையே ஆப்கான் ஜனாதிபதி பரபரப்பு உரை
ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.
ஆப்கானிதானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற தொடங்கிய நாள் முதல் ஆக்கிரமிப்புகளை தொடங்கிய தலிபான், தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில், இன்று ஆப்கான் ஊடகங்களில் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டு மக்களுக்காக முன்கூட்டியே பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிட்டப்பட்டது.
அதில் பேசிய அஷ்ரப் கானி, தற்போதைய சூழ்நிலையில், பாதுகாப்பு படையை மீண்டும் அணிதிரட்டுவதே நமது தலையாய கடமையாக உள்ளது, இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளார்கள் எனக்கு தெரியும்.
ஆனால், மோசமான நிலைமை, வன்முறை மற்றும் மக்கள் மேலும் இடப்பெயர்வைத் தடுப்பதே எனது குறி என்று ஜனாதிபதியாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இதற்காக, நான் அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும், அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச நட்பு நாடுகளுடன் பரவலான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளேன்.
Remobilisation of armed forces top priority; Extensive consultations have started to prevent further instability, war and destruction:Afghan President Ashraf Ghani, in his address to Afghanistan.#ashrafghani pic.twitter.com/UOuaIWnTu9
— All India Radio News (@airnewsalerts) August 14, 2021
விரைவில் இதுதொடர்பான முடிவுகளை மக்களுடன் பகிர்ந்து கொள்வேன் என அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.