நீலகிரி தேநீர் முதல் காஷ்மீர் குங்குமப்பூ வரை! G20 மாநாட்டில் மோடி கொடுத்த பரிசுகள்
ஜி 20 மாநாட்டில் விருந்தினர்களுக்கு இந்திய பிரதமர் மோடி என்ன பரிசுகளை வழங்கினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இசைப்பெட்டி
ஜி 20 மாநாட்டில் விருந்தினர்களுக்கு ஷீஷாம் மரத்தால் செய்யப்பட்ட இசைப்பெட்டியை பரிசாக மோடி வழங்கினார். இந்த பெட்டியின் வேலையானது கையால் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது பித்தளை பட்டை போடப்பட்டிருந்தது.
இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் தனி இடம் பிடித்த இந்த பெட்டியானது, புதையல் வைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பரிசானது பொக்கிஷத்திற்கு ஈடானது ஆகும்.
காஷ்மீர் பஷ்மினா
ஆடம்பர துணிகளில் பிரபலமானது காஷ்மீர் பஷ்மினா. கையால் செய்யப்படும் இந்த சால்வையானது அரிதான துணிகளில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
அதாவது, கம்பளி சாங்தாங்கி ஆட்டிலிருந்து இந்த துணி பெறப்படுகிறது. சாங்தாங்கி ஆடு 14,000 அடி உயரத்தில் காணப்படும். திறமையான கைவினைஞர்காளை பயன்படுத்தி இந்த பஷ்மினா சால்வைகள் தயாரிக்கப்படுகின்றன.
சுந்தர்பன் மல்டிஃப்ளோரா சதுப்புநில தேன்
வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகளின் சங்கமத்தால் உருவான டெல்டா பகுதியில் சதுப்புநிலக்காடு உள்ளது.
இந்த காடுகளில் தேன் எடுப்பதற்கு, மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செல்கின்றனர். இதில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் உள்ளது. மேலும், இது ஆரோக்கியமாகும்.
காஷ்மீர் குங்குமப்பூ
காஷ்மீர் குங்குமப்பூ விலையானது மிகவும் அதிகமாக இருப்பதால், இதனை சிவப்பு தங்கம் என்றும் கூறுவர். இதன் செயல்பாடு முழுவதும் கையால் செய்யப்படுகிறது.
அதாவது, ஒரு அவுன்ஸ் குங்குமப்பூவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பூக்கள் கைகளால் அறுவடை செய்யப்படுகிறது.
டார்ஜிலிங் மற்றும் நீலகிரி தேநீர்
உலகில் மிகவும் விலையுயர்ந்த டார்ஜிலிங் தேநீர், 3000-5000 அடி உயரத்தில் டார்ஜிலிங்கின் மூடுபனி மலைகளில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மேலும், தென்னிந்தியாவில் 1000-3000 அடி உயரத்தில் நீலகிரி தேயிலை பயிரிடப்படுகிறது.
ஜிக்ரானா வாசனை திரவியம்
உத்தரபிரதேச மாநிலத்தின் சிறந்த படைப்பு ஜிக்ரானா வாசனை திரவியம் ஆகும். இந்த திரவியத்தை மல்லிகை மற்றும் ரோஜா ஆகிய பூக்களிலிருந்து தலைசிறந்த கைவினைஞர்கள் தயாரிக்கின்றனர்.
அரக்கு காபி
ஆந்திர மாநிலத்தின் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை தோட்டங்களில் அரக்கு காபி வளர்க்கப்படுகிறது. இது, உலகின் முதல் டெராயர் மேப் செய்யப்பட்ட காபி ஆகும். மேலும், எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாமல் இதனை இயற்கை முறையில் பயிரிடுகின்றனர்.
காதி ஆடைகள்
மகாத்மா காந்தி பெயரிட்ட ஆடை தான் காதி ஆடை. இது, சுதந்திர போராட்ட தியாகிகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பருத்தி, பட்டு, சணல் அல்லது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
நாணய பெட்டி
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் G20 தலைவர் பதவியை நினைவுகூரும் வகையில் சிறப்பு G20 அஞ்சல் தலைகள் மற்றும் நாணயங்களை வெளியிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |