அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்கள் மாயம்!
அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தில்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது யார் என்ற போட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவியது.
அதனைத் தொடர்ந்து, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வசமானது.
இந்த நிலையில், அலுவலகத்தில் இருந்த பரிசுப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் களவாடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Representative Image
காணாமல் போன பொருட்களை அனைத்தும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விலையுயர்ந்த பொருட்கள் பலவும் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவல்துறையிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
timesofindia