கோஹ்லியின் சாதனையை முறியடித்த கில்! 518 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 518 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 அவுட்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் இந்திய அணி இன்று துடுப்பட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களில் இருந்தபோது ரன்அவுட் ஆனார். அவர் ஸ்கோரில் 22 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி அதிரடியாக 54 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும், துருவ் ஜூரெல் 79 பந்துகளில் 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முறியடித்த சுப்மன் கில்
அணியின் ஸ்கோர் 518 ஆக உயர்ந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிப்பட்டது. அணித்தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சதங்கள், 16 பவுண்டரிகள் அடங்கும். சதம் விளாசியதன் மூலம் விராட் கோஹ்லியின் (Virat Kohli) சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்.
அதாவது, அணித்தலைவராக ஓர் ஆண்டில் அதிக சதங்கள் (5) அடித்தவர் என்ற சாதனையை இருமுறை (2017யில் 16 இன்னிங்ஸ், 2018யில் 24 இன்னிங்ஸ்) கோஹ்லி செய்திருந்தார்.
ஆனால், கில் வெறும் 12 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்து அதனை முறியடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |