5 வயதில் ஆண் குழந்தைக்கு தாயாகிய சிறுமி - மருத்துவ உலகையே திருப்பி போட்ட சம்பவம்
1939 ஆம் ஆண்டில் லினா மடினா என்ற 5 வயது சிறுமி முழு ஆரோக்கியத்துடன் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
5 வயதில் தாயாகிய சிறுமி
1939 ஆம் ஆண்டில் லினா மடினா என்ற 5 வயது சிறுமிக்கு அவருடைய வயிறு பெரிதாக வளர ஆரம்பித்துள்ளது.
இது வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளது என நினைத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
சில முக்கியமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் தான் அவர்களுடைய மகள் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
பின் இதை பெற்றோர்களிடம் தெரிவித்த போது, அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மற்றொரு மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கும் அந்த சிறுமி தாயாக போவது உறுதியாகியுள்ளது.
ஒரு சிறுமி 5 வயதில் தாயாகிறாள் என்பது நம்ப முடியாத விடயமாக உலக முழுவதும் தீயாக பரவியது.
அதையடுத்து மருத்துவ வரலாற்றில் இளைய தாய் ஐந்தரை வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் மூன்று கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கும் மருத்துவம் பார்த்த வைத்தியர், ஜெரால்டோ என்று பெயர் வைத்தார். குழந்தையை பெற்றெடுக்கும் போது லினாவின் வயது- 5 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 21 நாட்கள் ஆகும்.
தாயாகுவதற்கு உடல் எப்போது தயாரானது?
லினாவுக்கு மூன்று வயதிலேயே முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டதாம். இது எப்படி என்று குறித்து மருத்துவர்களுக்கு தெரியவில்லை.
ஒருவேளை அந்த சிறுமி உடல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம், அதனால்தான் அவரது ஹார்மோன்கள் வளர்ச்சி சீக்கிரமாக நிகழ்ந்து இருக்கும் என தெரிவித்தார்கள்.
ஆனால் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்கள். லினாவின் முழுப் பெயர் லினா மார்செலா மெடினா டி ஜுராடோ ஆகும்.
லினா தனது மகனை எப்போதாவது மட்டுமே சந்தித்துள்ளார். லினாவின் மகன் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்துள்ளார்.
உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்து, லினாவின் தந்தையை கைது செந்திருந்தார்கள்.
பின் தகுந்த ஆதாரங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டார். லினா 1972ஆம் ஆண்டு தனது மகனையே திருமணம் செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
லினா இன்று வரையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவருடைய மகன் 1979 ஆம் ஆண்டு அதாவது 40 வயதில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து எதையும் பேச வேண்டாம் என்று சில சமயங்களில் ஊடகங்களுக்கு வேண்டுகோளும் லினா விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |