காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்..! திருமணமான கிரிக்கெட் வீரர் மீது பெண் புகார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் மீது தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டதாக போலீஸாரிடம் புகாரளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார்.
இதனை தொடர்ந்து புகாரளித்துள்ள இளம்பெண்ணும் இவரும் 2017ம் ஆண்டு முதல் நண்பர்களாக இருந்து பின் காதலித்து வத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 2019ல் திருமணம் செய்யப்போவதாக கூறி ராஜகோபால் சதீஷ் தனது காதலியை தனது சொந்த வீட்டுக்கு பலமுறை அழைத்து சென்று தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கொரோன காலகட்டத்தில் ராஜகோபால் சதீஷ் குமார் தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக திரும்பி வராததால் அவரது காதலி அவரை தேடி திருச்சிக்கு சென்றுள்ளார்.
அங்கு ராஜகோபால் சதீஸ் தனது மனைவி சாம்பவி யுடன் வாழ்ந்து வந்ததுள்ளார். இதனை அறிந்து வாக்குவாதம் நடந்து அங்கிருந்து அந்த பெண் திரும்பி வந்துள்ளார். பின் ராஜகோபால் சதீஸ் உடன் இருந்த உறவை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ராஜகோபால் சதீஷின் காதலிக்கு தேவி பரத் என்பவருடன் திருமணம் நடந்தது.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக 3 மாதங்களிலே பிரிந்துள்ளனர்.
இதனையடுத்து ராஜகோபால் சதீஷ் தனது காதலிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நாம் மீண்டும் நட்பை தொடரலாம் என்று கேட்டுள்ளார். இருவரும் மீண்டும் காதலை வளர்க்கத்தொடங்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் கொடைக்கானல் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதன் காரணமாக ராஜகோபால் சதீஷின் காதலி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி மற்றும் நண்பர் சுரேகா ஆகியோர் தன்னை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாக அடையாறு காவல் துணை ஆணையரை சந்தித்து ராஜகோபால் சதீஸின் காதலி புகார் மனு கொடுத்துள்ளார்.
அதன் பேரில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |