8-வது மாடியில் இருந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு
8-வது மாடியில் இருந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி உயிரிழப்பு
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை தகிசர் கிழக்கு மிஸ்கிதா நகர் பகுதியை சேர்ந்த துணி வியாபாரி சாவ்லா. இவருடைய 16 வயது மகள் ஜான்வி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவம் நடைபெற்ற தினத்தில் வானம் அழகாக காட்சி அளித்ததால் அதனை படம் பிடிக்க வேண்டுமென்று ஜான்வி நினைத்தார். பின்னர் தனது தந்தையிடம் அனுமதியை பெற்று 8 மாடிகளை கொண்ட கட்டடத்தின் மாடிக்கு சென்றார்.
அங்கு மொட்டை மாடியின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்தபடி வானத்தின் அழகுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி 8-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இதையடுத்து காயமடைந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |