ரயில் படிக்கட்டில் இருந்து பயணம் செய்தால் இனி அபராதம்
ரயில் படிக்கட்டில் இருந்து பயணம் செய்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ இனி அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்
தெற்கு ரயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல சென்னையில் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர்.

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
மேலும், பயணிகளுக்காக நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகள் ஆபத்தை உணராமல் சாகச பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் பலரும் உயிரிழக்கின்றனர்.
இது மாதிரியான பயணங்களை மேற்கொள்பவர்களை கண்காணித்து ரயில்வே பொலிஸார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் ரயில் படிக்கட்டில் இருந்து பயணம் செய்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ இனி ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |