தன்னிடம் அத்துமீறியதாக பாடகர் மீது புகாரளித்த இளம்பெண்... அந்த இளம்பெண்ணுக்கே சிறைத்தண்டனை அளித்த நீதிமன்றம்
தன்னிடம் பிரபல பாடகர் ஒருவர் அத்துமீறியதாக இளம்பாடகி ஒருவர் அளித்த புகார் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2017ஆம் ஆண்டு, மீஷா சாஃபி (39) என்ற பாடகி, அலி ஸஃபார் (40) என்னும் பாப் பிரபலம் பாடல் பதிவு ஒன்றின்போது தன்னிடம் அத்துமீறியதாக புகாரளித்திருந்தார். அவரது புகார் பாகிஸ்தானின் #MeToo இயக்கத்தை தட்டி எழுப்பியது.
மீஷாவைத் தொடர்ந்து மேலும் எட்டு பெண்கள், அலி மீது புகார் தெரிவித்தார்கள்.
மீஷா தனது வழக்கை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கொன்டுசென்றபோது, அவர் ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தின்கீழ் வேலை செய்ததாகவும், அவர் ஒரு நிறுவனதுதுக்காக வேலை செய்தார், அலிக்காக அல்ல என்று கூறி, அதனால் வேலைத்தலத்தில் துன்புறுத்தல் விதிகள் அவருக்கு பொருந்தாது என தீர்ப்பளித்துவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, மீஷா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள அலி, 6 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரியுள்ளார். மீஷாவின் குற்றச்சாட்டு, தனது சர்வதேச ஸ்பான்ஸர் மற்றும் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணி புரியும் வாய்ப்பு ஆகியவற்றை இழக்கச் செய்துவிட்டதாக அலி குற்றம் சாட்டியுள்ளார்.
நான் குற்றமற்றவன் என நிரூபிக்கும் நேரத்தில், எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஈடு செய்யமுடியாததாக ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார் அலி.
இதனால், மீஷா மூன்று ஆண்டுகள் வரை சிறை செல்லும் ஒரு நிலை உருவாகியுள்ளது. மீஷாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையால், பிற்காலத்தில் இதுபோல் புகார் செய்ய முன் வருவதை பெண்கள் தவிர்க்கும் சூழல் உருவாகியுள்ளதாக மீஷாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

