தன் 12 வயது மகள் கர்ப்பமுற்றிருப்பதாக எண்ணிய தாய்: மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி
பெண்ணொருவரின் 12 வயது மகள் வயிறு வலிப்பதாகக் கூற, அந்தச் சிறுமியின் வயிறும் சற்று வீங்கியிருக்க, தன் மகள் கர்ப்பமுற்றிருக்கலாமோ என்ற சந்தேகம் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
தன் மகள் கர்ப்பமுற்றிருப்பதாக எண்ணிய தாய்
டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர் சாரா டேவிஸ் (Sarah Davis, 42). சாராவின் மகளான ரூபிக்கு (Ruby-Mae) 12 வயது இருக்கும்போது, தனக்கு வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளாள் அவள்.

Credit: SWNS
மகளுடைய வயிறும் சற்று பெரிதாக இருப்பதைக் கண்ட சாரா, ஒருவேளை மகள் கர்ப்பமுற்றிருப்பாளோ என சந்தேகமடைந்து ரூபியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Credit: SWNS
மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி
ரூபியை மருத்துவர்கள் பரிசோதனைக்குட்படுத்தி அவரது வயிற்றை ஸ்கேன் செய்ய, அவளது வயிற்றில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது. அது, teratoma என்னும் அபூர்வ வகைக் கட்டியாகும்.

Credit: SWNS
அந்தக் கட்டிக்குள் பற்கள், முடி, எலும்புகள் ஆகியவை இருக்கும். எதனால் இந்த கட்டி உருவாகிறது என்பது இன்னமும் முழுமையாக கற்றறியப்படவில்லை.
ரூபி தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே இந்த கட்டி உருவாகியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக குழந்தை பிறக்கும்போதே இப்படி ஒரு பிரச்சினை இருப்பது தெரியவந்துவிடும். ஆனால், ரூபிக்கு இதுவரை அது வெளியில் தெரியாமலே இருந்துள்ளது.

Credit: SWNS
மருத்துவர்கள் அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள். அந்தக் கட்டி 8 பவுண்டுகள் எடை கொண்டதாக, அதாவது, ஒரு குழந்தையின் அளவுக்கு எடையுள்ளதாக இருந்துள்ளது. தற்போது ரூபிக்கு 16 வயதாகிறது. அவள் நன்றாக இருக்கிறாள்.

Credit: SWNS

Credit: SWNS
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |