விமான நிறுவன ஊழியரை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதலி: துண்டு, துண்டாக வீசப்பட்ட உடல்
சென்னை விமான நிறுவன ஊழியர் ஒருவர் தனது காதலியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விமான நிறுவன ஊழியர் கொலை
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான ஜெயந்தன் என்ற நபர் சென்னையில் தனது சகோதிரி வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் இவர் சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது.
@news18
கடந்த மார்ச் 18ம் திகதி ஜெயந்தன் தனது சகோதரியிடம் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தன் ஊருக்கு போய் சேரவில்லை.
மேலும் அவரது சகோதரி அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிச் ஆப் என வந்திருக்கிறது.
காவல்துறை விசாரணை
சந்தேகத்தின் பேரில் ஜெயந்தனை காணவில்லை என காவல்துறையில் அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணையை துவங்கிய பழவந்தாங்கல் காவல்துறை ஜெயந்தனின் செல்போன் டவரை வைத்து கடைசியாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்ததாக காட்டியுள்ளது.
@facebook
இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் பாக்கியலட்சுமி(38) என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
துண்டு, துண்டாக வெட்டப்பட்ட உடல்
பாக்கிய லட்சுமியை பொலிஸார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப் பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்து கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாக பொலிஸாரிடம் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
@getty images
மேலும் தனக்கு புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கோவளத்தை சேர்ந்த வேல் முருகன் ஆகியோர் உதவியதாகவும் கூறியுள்ளார்.
காதல் திருமணம்
பாலியல் தொழிலில் இருந்த தன்னை ஜெயந்தனுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் நாங்கள் ரொம்ப நாளாக பழகி வந்தோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் கடந்த 2020 ஆண்டில் விழுப்புரத்திலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.
2021 ஆண்டு அவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறிய பாக்கியலட்சுமி, அதன் பின் சில தினங்களுக்கு முன் வந்து ஜெயந்தன் தன்னை தொல்லை செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் தான் அவரை கொலை செய்தேன் என பாக்கியலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.