இது எனது கனவு..! ஒட்டகச்சிவிங்கியை கொன்று இதயத்தை பரிசாகக் கொடுத்த கொடூர காதலி
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் ஒரு சிட்ரஸ் பண்ணையை நடத்தி வரும் வான் டெர் மெர்வே (32 வயது) என்ற பெண் ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெர்வே தனது கணவர் காதலர் தின வார இறுதியில் ஒரு விளையாட்டு பூங்காவில் வயதான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட 1,500 டாலர் செலவழித்து தனது ஐந்தாண்டு கனவை நினைவாகியுள்ளதாக என முகநூல் பக்கத்தில் பெருமையாகக் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூகவாசிகள் இப்பதிவை பார்த்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மெர்வே தனது 5வது வயதில் வேட்டையாடத் தொடங்கியுள்ளார். சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் உட்பட 500 விலங்குகளைக் கொன்றுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வான் டெர் மெர்வே தெரிவிக்கையில், “நான் ஆண் ஒட்டகச்சிவிங்கிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தேன். நான் இதன் தோலை நேசிக்கிறேன். இது ஆப்பிரிக்காவுக்கு ஒரு சின்னமான விலங்கு.
இது எனது கனவு என்பதை என் ஹெகார்ட் கணவர் அறிந்திருந்தார். எங்கள் திட்டங்கள் விரைவாக நடந்துள்ளது. நான் 2 வாரங்கள் ஒரு குழந்தையைப் போல இதற்காக காத்திருந்தேன், நாட்களை எண்ணினேன். உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன். மேலும் கொல்லப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் தோலை ஒரு கம்பளமாகப் பயன்படுத்த போவதாக” கூறியுள்ளார்.


