இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவது எத்தனை பேர்? வெளியான அறிக்கை
இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்
நாட்டில் செல்வம் குவிந்திருப்பது மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக அறிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வருமான வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்னிக்கை 415 ஆக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் 576 ஆக அதிகரித்துள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 142 ஆகவும், 2022-23 நிதியாண்டில் 301 ஆகவும், 2023-24 நிதியாண்டில் 284 ஆகவும் இருந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 86.7 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார்.
அவரைத் தொடர்ந்து கௌதம் அதானி 85.5 பில்லியன் டொலருடனும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் 37.5 பில்லியன் டொலருடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |