சரிந்த அணியை முதல் சதமடித்து காப்பாற்றிய பிலிப்ஸ்: ஆர்ச்சரை சமாளிக்க கண்ணாடி (வீடியோ)
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் க்ளென் பிலிப்ஸ் முதல் சதம் விளாசினார்.
தாக்குப்பிடித்த கூட்டணி
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
Glenn Phillips vs Jofra Archer💀🥶
— aaku editz (@iimaku__) June 19, 2026
This video is shared for cricket fans' appreciation and discussion purposes only. All rights belong to the respective owners and broadcasters. No copyright infringement intended.#NZvsENG #ENGvsNZ #JofraArcher #glennphillips pic.twitter.com/7ouQwFx4mg
முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து 107 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது கைகோர்த்த டேர்ல் மிட்செல், டாம் ப்ளெண்டல் கூட்டணி சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தியது.
44 ஓட்டங்கள் எடுத்திருந்த டேர்ல் மிட்செல் ஆட்டமிழக்க, டாம் ப்ளெண்டல் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெத்தேல் ஓவரில் அவுட் ஆனார்.
க்ளென் பிலிப்ஸ் முதல் சதம்
பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.
ஒரு கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை சமாளிக்க அவர் கண்ணாடி அணிந்து ஆடினார். அது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதிரடி காட்டிய கைல் ஜெமிசன் 41 (48) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பிலிப்ஸ் கடைசி விக்கெட்டாக 100 ஓட்டங்களில் (18 பவுண்டரிகள்) அவுட் ஆனார்.

இதன்மூலம் நியூஸிலாந்து அணி 391 ஓட்டங்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தெல் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், மேத்யூ ஃபிஷர் மற்றும் சோனி பேக்கர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |