கடைசி ஓவரில் வேண்டுமென்றே இடதுகை வீரராக மாறி சிக்ஸர் அடித்த வீரர்! வைரல் வீடியோ
க்ளென் பிலிப்ஸ் இடதுகை வீரராக மாறி சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
க்ளென் பிலிப்ஸ்
சூப்பர் ஸ்மாஷ் 2025 போட்டியில் ஒடாகோ மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஒடாகோ அணி 193 ஓட்டங்கள் குவித்தது.
What a shot that was for 6 runs , Take a bow of Left handed Glenn Phillips 🙇 pic.twitter.com/y1jJ6OOOLG
— 𝐑 𝐈 𝐓 𝐈 𝐊 (@Dhoni_Tweetz) December 30, 2025
ஜமால் டோட் 16 பந்துகளில் 32 ஓட்டங்களும், மேக்ஸ் ச்சூ 17 பந்துகளில் 26 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
க்ளென் பிலிப்ஸ் 48 பந்துகளில் 90 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
வைரல் வீடியோ
பின்னர் ஆடிய சென்ட்ரல் அணி 152 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக 40 (19) ஓட்டங்கள் எடுத்தார்.

இப்போட்டியில் க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) கடைசி ஓவரின் 5வது பந்தை எதிர்கொள்ளும் முன், இடதுகை வீரராக மாறி நின்றார்.

இதனால் பந்துவீச்சாளர் ஃபீல்டை மாற்றியமைத்தார். ஆனால், பிலிப்ஸ் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |