2024 உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு: 176 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!
உலக இயற்கை குறியீட்டில் இந்தியா 176வது இடத்தை பிடித்துள்ளது.
உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு
2024ம் ஆண்டுக்கான உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு ஆய்விற்கு 180 நாடுகள் உட்படுத்தப்பட்ட நிலையில், இந்தியா இதில் 176வது இடம் பிடித்துள்ளது.
இயற்கை பாதுகாப்பு குறியீடு, நில மேலாண்மை, ஆளுமை மற்றும் திறன், எதிர்கால போக்கு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல் அளவு ஆகிய மதிப்பிட்டுகளின் 100 என்ற உச்ச அளவில் இந்தியா 45.5 மதிப்பெண் பெற்று 176வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து மைக்ரோனேசியா 177வது இடத்திலும், ஈராக் 178வது இடத்திலும், துருக்கி 179 இடத்திலும், கிரிபாட்டி 180வது இடத்திலும் உள்ளது.
இந்த ஆய்வானது Goldman Sonnenfeldt School-யின் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம், மற்றும் லாப நோக்கமற்ற BioDB என்ற வலைதளத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நகரமயமாதல் காரணமாக ஏற்படுத்தப்படும் நில மாற்றங்கள் 53 சதவீதத்தை அடைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2001 முதல் 2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மட்டும் காடு அழிப்பு காரணங்களால் அதிர்ச்சியூட்டும் விதமாக 23,300 சதுர கி மீ மரங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |