மரத்தின் இலைகளில் கிடைக்கும் தங்கம் - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,700 என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில் மரத்தில் இருந்து தங்கம் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மரத்தின் இலைகளில் தங்கம்
ஔலு(Oulu) பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் புவியியல் ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்லாந்தில் உள்ள லாப்லாண்ட் காட்டில் உள்ள நார்வே ஸ்ப்ரூஸ் மரங்களின்(Norway spruce trees) இலைகளில் இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.
கிட்டிலா தங்க சுரங்கத்திற்கு அருகே உள்ள 23 நார்வே ஸ்ப்ரூஸ் மரங்களில், 138 இலைகளை சேகரித்து, அதை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி வைத்து ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வில், 4 மரங்களின் இலைகளின் நுனியில் நானோ அளவிலான தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த அளவானது ஒரு மீட்டரில், ஒரு மில்லியனில் ஒரு பங்கு என்ற அளவில் உள்ளது.
இதன் பின்னணியில், அந்த மரங்களில் உள்ள பாக்டீரியா குழுக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மண்ணில் திரவவடிவில் உள்ள தங்கம் வேர் மூலமாக மரத்திற்குள் நுழைந்து இலைக்கு செல்கிறது. இந்த இலைகளில் பாக்டீரியா குழுக்கள் இதனை திட வடிவ தங்கமாக மாற்றுவது தெரிய வந்துள்ளது.
இது வணிக ரீதியாக லாபமளிக்காது என்றாலும், தங்க சுரங்கங்களை தோண்டும் முன்னர் அங்குள்ள இலைகளில் ஆய்வு செய்வதன் மூலம் தங்கத்தின் இருப்பை கண்டறிய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |