சொகுசு கப்பலில் நிரந்தரமாக குடியிருக்க Golden Passport: மலைக்க வைக்கும் அதன் கட்டணம்
சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று ஓய்வு பெற்றவர்களுக்காக Golden Passport ஒன்றை அறிமுகம் செய்து, தங்கள் கப்பலில் நிரந்தரமாக குடியிருக்கும் வாய்ப்பை வழங்க உள்ளது.
140 நாடுகளில்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த Villa Vie Residences என்ற கப்பல் நிறுவனமே, தங்களின் சொகுசு கப்பல்களில் நிரந்தரமாக குடியிருக்க ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கென 99,999 டொலர் முதல் Golden Passport ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் இணையும் நபர்கள் 140 நாடுகளில் உள்ள 400 பகுதிகளுக்கு கப்பலில் பயணம் செய்ய முடியும்.
அதாவது ஒவ்வொரு முறையும் மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரையில் பயணம் நீளும். இந்த 400 துறைமுகங்களிலும் கப்பல் மூன்று நாட்கள் வரையில் நிறுத்தப்படுவதால், விருந்தினர்களுக்கு அப்பகுதிகளை விரிவாகப் பார்வையிட முடியும்.
இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு உணவு, மது, பொழுதுபோக்கு உட்பட அனைத்தும் இலவசம். சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அத்துடன் துறைமுகத்தில் செலுத்த வேண்டிய கட்டணமும் நிர்வாகமே செலுத்தும்.
Golden Passport உரிமையாளர்களுக்கு வருடாந்தர மருத்துவ சோதனைகளும் இலவசமாக அளிக்கப்படும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 99,000 அமெரிக்க டொலர் கட்டணமாக வசூலிக்கின்றனர். 55 முதல் 60 வயதுடையவர்களுக்கு 299,999 டொலர் கட்டணமாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
வரம்பற்ற விமானப் பயணம்
ஒருமுறை கட்டணம் செலுத்தினால், ஆயுள் முழுவதும் தங்களின் சொகுசு கப்பலில் குடியிருக்கலாம் என அறிவித்துள்ளனர். இதனிடையே, Frontier Airlines நிறுவனமும் 599 டொலர் கட்டணத்தில் ஓராண்டுக்கு வரம்பற்ற விமானப் பயணங்களை அளிக்கிறது.
உள்ளூர் மட்டுமின்றி, அமெரிக்கா, கரீபியன், மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும் பயணிக்கலாம். 2025 மே 1ம் திகதி முதல் 2026 ஏப்ரல் 30 திகதி வரையில் இந்த 599 டொலர் சலுகை செல்லுபடியாகும்.
அதன் பின்னர் ஆண்டுக்கு 699 டொலர் கட்டணத்தில் புதுப்பிக்கலாம். இச்சலுகையில் இணைந்தவர்கள் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு உள்நாட்டு விமானங்களை முன்பதிவு செய்யவும் சர்வதேச பயணத்திற்கு புறப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யவும் முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |