உக்ரைனில் களமிறங்கும் அமெரிக்க இராணுவம்... வெளிப்படையாக பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க இராணுவம் உக்ரைனில் களமிறங்கலாம் என ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்த 24 மணி நேரத்தில், அதற்கு வாய்ப்பில்லை என அவரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிறப்பு நடவடிக்கை
உக்ரைனில் பிரித்தானிய இராணுவம் களமிறங்கக் கூடும் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதுபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா தொடர்பில் வாய்ப்பில்லை என மறுத்துள்ளார்.
ஐரோப்பிய இராணுவம் மற்றும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைனில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும், பிரித்தானியாவுடன் இணைந்து உக்ரைனில் களமிறங்கும்.
சமாதான உடன்படிக்கை
ஆனால், ரஷ்யா உடன் ஒரு சமாதான உடன்படிக்கையை அடைவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பதை ட்ரம்ப் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது, அமெரிக்க இராணுவம் உக்ரைனில் களமிறங்கும் சாத்தியம் குறித்து குறிப்பிட்ட ட்ரம்ப், பின்னர் அதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.
திங்களன்று தெரிவித்த கருத்தை பின்னர் மறுத்துள்ள ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளின் இராணுவம் மட்டுமே உக்ரைனில் களமிறங்கும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |