வெற்றியடைந்த சந்திரயான் 3 விண்கலம்: இந்தியாவுக்கு கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை வாழ்த்து
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்
நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி இந்தியா விண்வெளிக்கு ஏவியது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் இந்திய நேரப்படி இன்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.
அத்துடன் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரையும் நிலவின் மேற்பரப்பில் இந்தியா வெற்றிகரமாக இறக்கியுள்ளது.
சுந்தர் பிச்சை வாழ்த்து
இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், “என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
A Moment of Marvel: Google CEO Sundar Pichai Cheers ISRO's Triumph ?? India's Landmark Soft Lunar Landing in the Southern Polar Region!#Chandrayaan3 #Chandrayaan_3 #Chandrayan3 #ISRO #VikramLander #PragyanRover #MoonLanding #Chandrayaan3Landing #IndiaOnTheMoon pic.twitter.com/AJHqWR6gHp
— Oneindia News (@Oneindia) August 23, 2023
அத்துடன் நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது என்றும் கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |