பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்த Google
Google invests 15 Bn Dollars in AI and nuclear deal: கூகுள் நிறுவனம் பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது.
பின்லாந்தில் 13 பில்லியன் யூரோ முதலீடு
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Google (Alphabet Inc.) பின்லாந்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பில் 13 பில்லியன் யூரோ ($15.1 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முதலீடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். அதோடு, Google தனது முதல் அணு மின்சார ஒப்பந்தத்தை அமெரிக்காவிற்கு வெளியே பின்லாந்தில் கையெழுத்திட்டுள்ளது.

பின்லாந்தின் Fortum நிறுவனம், தனது இரண்டு அணு மின் நிலையங்களில் ஒன்றின் மின்சார உற்பத்தியின் 50 சதவீதம் வரை 22 ஆண்டுகள் Google-க்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது கூகுள் நிறுவனத்திற்கு பெரிய அடித்தளம் என்றும் இதுவே அமெரிக்காவிற்கு வெளியே கூகுளின் முதல் அணு மின்சார ஒப்பந்தம் என்றும் Google-ன் Chief Investment Officer Ruth Porat ஹெல்சிங்கியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்லாந்து, Microsoft மற்றும் ByteDance போன்ற நிறுவனங்களும் தரவு மையங்களை அமைக்க விரும்பும் முக்கிய இடமாக மாறியுள்ளது. காரணம், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாய்ப்புகள் அங்கு உள்ளது.
மேலும், Google மற்றும் Fortum இணைந்து பின்லாந்தில் புதிய அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை ஆராய உள்ளன.
இந்த நடவடிக்கை, AI உள்கட்டமைப்புக்கான மிகப்பெரிய ஆற்றல் (மின்சார) தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகளாவிய தொழில்நுட்ப துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |