Google Pay-ல் இப்போது பயனர்கள் எதிர்பாராத புதிய வசதி.!
Google Pay-வில் இப்போது பயனர்கள் எதிர்பாராத புதிய அட்டகாசமான வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Google Pay-ல் புதிய வசதி
Google இப்போது RuPay கிரெடிட் கார்டுகளை இணைத்து UPI பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை பயனர்கள் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு (Debit card) பயன்படுத்தி மட்டுமே இணைத்து பணப்பரிவர்த்தனை செய்து வந்த நிலையில், புதிதாக கிரெடிட் கார்டு (Cebit card) இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
RuPay கார்டு மட்டுமே
ஆனால் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது. ரூபே கார்டு மட்டுமே இணைக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூகுள் பே-வில் ரூபே கிரெடிட் கார்டு (RuPay) அடிப்படையிலான யுபிஐ பேமெண்ட்டுகளை தொடங்குவதற்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (NPCI) க் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பயனர்கள் இப்போது கூகுள் பே-வில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்தலாம்.
ஆதரிக்கும் வங்கிகள்
தற்போது HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை இந்த வசதியில் ஆதரிப்பதாக Google Pay தெரிவித்துள்ளது,. இனி வரும் நாட்களில் மேலும் சில வங்கி கார்டுகளை இணைக்க திட்டமிட்டுள்ளது