இனி ஜிமெயில் முகவரியை மாற்றலாம் - கூகிள் வெளியிட அசத்தல் அறிவிப்பு
ஜிமெயில் முகவரியில் மாற்றம் செய்யும் வசதியை கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜிமெயில்
டிஜிட்டல் யுகத்தில் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர் எனஅனைவரும் சமூகவலைத்தள உள்நுழைவு,தகவல் பரிமாற்றம் என ஏதேனும் ஒரு வகையில் இ-மெயில் முகவரி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதில், பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக சமூகவலைத்தளங்களில், பயனர்கள் தங்களது பயனர் பெயரை மாற்ற விரும்பினால், இன்னொரு கணக்கு தொடங்காமலே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பயனர் பெயரை மாற்ற அனுமதிக்கிறது.
ஆனால், இந்த வசதி ஜிமெயில் நிறுவனத்தில் இல்லாமல் இருந்தது. பயனர்கள் பெயரை மாற்ற விரும்பினால், புதிய ஜிமெயில் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஜிமெயில் முகவரியில் மாற்றம்
தற்போது புதிய கணக்கை உருவாக்காமலே ஜிமெயில் முகவரியை(gmail id) மாற்றும் அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்த உள்ளது.
n
ஜிமெயில் முகவரியில் மாற்றம் செய்தாலும், அதே கணக்கு சுயவிவரத்தை வைத்திருக்கும், மேலும் கூகிள் புகைப்படங்களில் உள்ள முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள், யூடியூப் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்த மாற்றத்திற்கு பின்னர் உங்கள் பழைய ஜிமெயில் முகவரி செயலிழந்து விடாது. மாறாக 2வது ஜிமெயில் முகவரியாக செயல்படும்.
பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். ஜிமெயில் கணக்கில் உள்நுழையும் போது, இரு முகவரிகளை பயன்படுத்தி உள்நுழைய முடியும். உங்களது பழைய முகவரி வேறு யாருக்கும் வழங்கப்படாது.
இதே போல், அதிகபட்சமாக 3 முறை மாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது 4 ஜிமெயில் முகவரிகளை ஒரு கணக்குடன் இணைத்து கொள்ளலாம்.
ஆனால், ஒரு முறை மாற்றம் செய்து விட்டால் குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகுதான், மீண்டும் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
இந்த மாற்றம் படிப்படியாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள்கூகுள் கணக்கில் (Settings) ‘தனிப்பட்ட தகவல்’ (Personal Info) ‘Email’ என்ற பகுதியில் இந்த வசதி உங்களுக்கு வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |