5 முதல் 6 மணி நேரம் வேலை செய்தே 200 சதவீத வருவாய் கிடைத்தது.., வேலை நேரம் குறித்து இந்திய நிறுவனரின் பேச்சு
நிறுவனர் ஒருவர் குறைந்த மணி நேரங்கள் வேலை செய்தே நல்ல வருவாய் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
குறைந்த மணிநேரம் வேலை
பட்டய கணக்காளர் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான DigiWhistle இன் இணை நிறுவனராக இருப்பவர் தீபக் பாட்டி. இவர் வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பாக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதாவது, நீண்ட நேரம் வேலை செய்வது 'உற்பத்தித்திறனை' உறுதி செய்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அவர், "நான் ஒரு நாளைக்கு 12-14 மணிநேரம் வேலை செய்வதில்லை. பெரும்பாலான நாட்களில் 5-6 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறேன். அவ்வாறு வேலை செய்து தனது நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 200% வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
என்னுடைய நிறுவனத்தின் வெற்றி என்பது 24/7 செயல்படுவது அல்ல, மாறாக சரியாக விடயங்கள் கவனம் செலுத்துவதில் வந்துள்ளது" என்று தனது LinkedIn இல் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
இது தவிர மீதி நேரங்களில் படிப்பதாகவும், யோசிப்பதாகவும் தெரிவித்தார் தீபக் பாட்டி. அதோடு, "இது எனது லட்சியத்தைக் குறைப்பதாக நினைக்கவில்லை. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் ஆரம்பத்திலிருந்தே பல நலன்களை பெற்றேன்" என்றார்.
LinkedIn இன் படி, தீபக் பாட்டி ஒரு CA ஆவார். ஒரு மூத்த இணை தணிக்கையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 2019 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனத்தை நிறுவினார். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் மற்றொரு ஸ்டார்ட்அப்பை இணைந்து நிறுவினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |