சஜித்துக்கு பதிலாக ரணிலை பிரதமராக நியமித்தது ஏன்? நடந்ததை போட்டுடைத்த அதிபர் கோட்டாபய
இலங்கை பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று காலை முதல் இலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனையடுத்து, இலங்கையின் எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் பதவி விலக வேண்டும் என்பது உட்பட 4 நிபந்தனைகளை ஏற்றால் தான் பிரதமராக பதவி ஏற்க தயாராக இருப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், சஜித்தின் கடிதத்திற்கு அதிபர் கோட்டாபய அன்றைய தினமே பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அவரை பிரதமராக நியமிப்பதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக சஜித்திடம் அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்பது குறித்து முடிவெடுக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான நேரம் கொடுத்தேன்.
ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் மீண்டும் பிரதமராகிறார்! குவியும் எதிர்ப்பு
பலமுறை சஜித்தை தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தேன், ஆனால் அவர் தொடரந்து நிராகரித்ததால் மற்ற வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க நேர்ந்ததாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.