ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் மீண்டும் பிரதமராகிறார்! குவியும் எதிர்ப்பு
ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கை பிரதமராகிறார் என தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.
இதனிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் ஆதரவுடன் ‘அனைத்து கட்சிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு’ ரணில் தலைமை தாங்குவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுபவராக இருந்து வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதிபர் கோட்டாபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. சபாநாயகர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு
ரணில் கோட்டாபயவை நம்புவார் மற்றும் கோட்டாபய ரணிலை நம்புவார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ரணிலை இலங்கை பிரதமராக நியமிப்பதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.