அதிபர் கோட்டாபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. சபாநாயகர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுகு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் மே 17ம் திகதி இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மே 17ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளில் விசேட அங்கீகாரம் பெற்ற பின்னர் இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அங்கீகாரத்துடன் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எங்களுக்கு இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை! நாமல் ராஜபக்ச
இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அதிபர் கோட்டாபய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் தொடர் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.