சிங்கப்பூரில் மனைவியுடன் கோட்டாபய? வைரலாகும் புகைப்படம்
சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச விமான நிலையத்தில் உள்ள துணிக்கடையில் மனைவியுடன் ஷாப்பிங் செய்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது நாட்டிலிருந்து புதன்கிழமையன்று மாலைதீவுக்கு இலங்கையின் விமானப்படை விமானத்தில் தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து வியாழக்கிழமையன்று சவுதி விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு சென்றார்.
இதையும் படியுங்கள்: வளர்ப்பு மகளுடன் 2-வது குழந்தை பெற்ற எலான் மஸ்க் தந்தை!
முறைப்படி ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்காமல் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற கோட்டாபய, சிங்கப்பூருக்கு சென்றபிறகு அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினார். இது குறித்த தகவல் வெளியான சில மணிநேரங்களில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் உறுதி செய்தார்.
சிங்கப்பூரில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார், அவரது அடுத்த நகர்வு என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அவர் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், டெர்மினல் 3-ல் தனது மனைவியுடன் ஷாப்பிங் செய்ய கடைக்கு சென்றதாக புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.