இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குகிறோம்! ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றிவிட்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.
எனவே ஊழியர்கள் அனைவரும் வழக்கம் போல பணிக்கு திரும்ப வேண்டும், உங்கள் வழக்கமான வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.