அண்ணாமலை உதவியுடன் கொண்டு வரும் படகுகளை தமிழக அரசு தடுக்கிறதா? பாஜக குமுறல்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மீட்பதற்கு பாஜக சார்பில் கொண்டு வரும் படகுகளை தமிழக அரசு தடுக்கிறது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் மக்கள் பாதிப்பு
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் 3 நாள்களாக தீவு போல காட்சியளிக்கிறது. இதனால், மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னை வெள்ளத்திற்கு திமுகவின் நிர்வாகத் தோல்வியே காரணம்.., ரூ.4,000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்: சீமான் ஆவேசம்
மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான முடிச்சூர், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மழைநீரில் சிக்கி தவித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான உணவுகள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில், பாஜக சார்பில் கொண்டு வரும் படகுகளை தமிழக அரசு தடுக்கிறது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கடலூரிலும் சென்னை அருகிலுமிருந்து படகுகளை வரவழைத்து பாஜக மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் உதவியோடு மாநில செயலாளர் திருமதி.மீனாட்சி நித்யசுந்தர் அவர்கள் சென்னை முடிச்சூரில் மக்களை மீட்க படகுகள் செலுத்துவதைக் கூட தடுக்க நினைக்கிறது தமிழக அரசு..
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 6, 2023
மக்களுக்கு உதவ அரசு உத்தரவு… pic.twitter.com/3rreiiBfw6
தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கடலூரிலும் சென்னை அருகிலுமிருந்து படகுகளை வரவழைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதவியோடு மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர், சென்னை முடிச்சூரில் மக்களை மீட்க படகுகள் செலுத்துவதைக் கூட தமிழக அரசு தடுக்க நினைக்கிறது. மக்களுக்கு உதவ அரசு உத்தரவு வேண்டும் என்கிறதா அரசு" என்று குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |